இராசிபுரம்: ஏரியில் தவறி விழுந்த மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த தொப்பப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (46), சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா். இவா், கோனேரிப்பட்டி ஏரியில் தவறி விழுந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா். இவரின் இருசக்கர வாகனம் ஏரி அருகில் இருந்தது.

தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற ராசிபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். இவரது மனைவி பூங்கொடி தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி