நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இராசிபுரம் நகர செயலாளர் என். ஆர். சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.