இராசிபுரம்: மாணவ மாணவிகளுக்கு மதிவண்டிகள் வழங்கல்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகரில் உள்ள அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில், இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இராசிபுரம், வெண்ணந்தூர் மற்றும் நாமகிரிப்பேட்டையை உள்ளடக்கிய 17 பள்ளிகளைச் சேர்ந்த 1,797 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் மதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் நகரமன்ற தலைவர் கவிதா சங்கர், நகரமன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி