இராசிபுரம்: லோகேஷ் தமிழ்ச்செல்வன் பற்றிய விபரம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் சபாநாயகர் ப. தனபாலின் மகன் ஆவார். சேலம் தாதகாப்பட்டியில் வசிக்கும் இவர், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் தவெக கட்சியில் இணைந்தார். ஏற்கெனவே 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், அரசியல் அனுபவம் மற்றும் பொதுமக்களிடையே ஓரளவு அறிமுகம் பெற்றவர் என்பதால் 14511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி