இராசிபுரம்: ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (ஆர். சி. எம். எஸ்) சார்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஆர். சி. எச். ரகம்-668 மூட்டைகள், கொட்டு ரகம் 42 மூட்டைகள் என மொத்தம் 710 மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். 

தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் ஆர். சி. எச். ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 6600 முதல் அதிகபட்சமாக ரூ. 7940 வரை விற்பனையானது. கொட்டு ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 3300 முதல் அதிகபட்சமாக ரூ. 4425 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி