நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, தலைமை அரசு மருத்துவமனைக்குள் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக இராசிபுரம் முழுவதும் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.