இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்லூரியில் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு மற்றும் பொதுக் கலந்தாய்வில் மாணவா்கள் சேர்க்கை ஜூன் 2-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையவழி மூலம் கல்லூரியில் சேர்க்கை பெற விண்ணப்பித்தவா்கள் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் தரவரிசைப்படி ஜூன் 9-இல் தொடங்கி ஜூன் 14 வரை நடைபெறும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெறலாம்.
நாள்தோறும் காலை 9 மணி முதல் முதல் சுழற்சி வகுப்பிற்கு கலைப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், பொது நிா்வாகம், வணிகவியல், அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல், கணினி அறிவியல் போன்றவற்றிற்கு பொதுக்கலந்தாய்வு நடைபெறும் என்றார்.