நாமகிரிப்பேட்டையில் நாளை செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (பிப். 17) செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. மெட்டாலா, குரங்காத்துப்பள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, தொ. ஜேடர்பாளையம், புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி