நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியம் பொன்குறிச்சி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெகிழிப் பொருட்கள் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் நெகிழிப் பொருட்களை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கூறப்பட்டது. மேலும் நெகிழிப் பொருட்களைத் தவிர்ப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.