இராசிபுரத்தில் காவலருக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் மேட்டுத் தெருவில் வசிக்கும் சித்ரா, உடல்நிலை சரியில்லாத தனது தாயை சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்த அவர், மருத்துவ செலவுக்காக விற்க தனது ஆறரை சவரன் நகைகளை பையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, நகை வைத்திருந்த பையை தவறவிட்டார். இந்நிலையில், ராசிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் செல்வி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, மருத்துவமனை வளாகத்தில் கீழே கிடந்த பையை எடுத்து பார்த்தார்.

அதில் நகைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனிடையே நகைகளை தவறவிட்டது மேட்டுத் தெருவைச் சேர்ந்த சித்ரா என தெரியவந்ததையடுத்து, உரிய விசாரணைக்குப் பின் போலீசார் அவரிடம் நகைகளை ஒப்படைத்தனர். இந்நிலையில் கீழே கிடந்த நகை பையை காவல் துறையில் ஒப்படைத்த தலைமைக் காவலர் செல்வியின் நேர்மையை பாராட்டி ராசிபுரம் மக்கள் நலக்குழு சார்பில் பாராட்டி இனிப்பு வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி