நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள இராசிபுரம் பேருந்து நிலையத்தில், மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அதற்கான சட்டங்கள், இணையதள மோசடிகள் மற்றும் அவசர உதவி எண்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.