பிள்ளாநல்லூர்: 200-க்கு மேற்பட்ட தீர்த்த குடம் ஊர்வலம்

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் அருகே கொமாரபாளையத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ மஹா ராஜ முனியப்பன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று தீர்த்த குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தீர்த்த குடங்களை எடுத்துச் சென்று தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். மேள தாளங்களுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.

தொடர்புடைய செய்தி