நாமகிரிப்பேட்டையில் இயற்கை விவசாய பயிலரங்கு

நாமகிரிப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான இயற்கை விவசாய பயிலரங்கு நடைபெற்றது. திண்டுக்கல், கோயமுத்தூா், உதகை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கருத்தரங்கில் கலந்துகொண்டனா். பயிலரங்கில் நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் மா. புவனேஸ்வரி தலைமை வகித்து இயற்கை வேளாண்மை குறித்த தொழில்நுட்ப புத்தக கையேட்டை வெளியிட்டு பேசினாா்.

தொடர்புடைய செய்தி