இராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே வடுகம் பகுதியைச் சேர்ந்த குமார் (44) என்பவர், தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம், மாட்டு கொட்டகையில் மின்சார பால் கறக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது, இயந்திரத்தின் ஒயரில் ஏற்பட்ட மின்கசிவை கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி