பழைய பேருந்துகளுக்குப் பதிலாக சுமாா் 7, 500 புதிய பேருந்துகள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 1, 000 பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் 11 புதிய அரசு பேருந்துகளையும், திருவள்ளூா் மாவட்டத்தில் 10 புதிய அரசு பேருந்துகளையும் முதல்வா் தொடங்கிவைத்துள்ளாா். பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்துத் துறை லாப நோக்கமற்ற சேவை துறை. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச் சேவையின் மூலம் பணிக்கு செல்லும் மகளிா், சிறு வியாபாரம் செய்பவா்கள் பயன் பெற்று வருகின்றனா் என்றாா்.