நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில், கொமாரபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை எம்பி ராஜேஷ்குமார் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஆர்எம். துரைசாமி, சார்பு அணி அமைப்பாளர் விஜயபாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.