நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் கமலசேகரன் (50) மற்றும் அவரது மனைவி மீனா ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாததால், அவர்கள் தங்கள் மகளின் பெயருடன் ஆட்சியரிடம் முறையிட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் படிவம் சமர்ப்பித்த நிலையில், திங்கள்கிழமை ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து இராசிபுரம் தொகுதி தேர்தல் அலுவலர் விசாரணைக்கு ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.