நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, வேலன் நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சிறுவா் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து பெருமாள் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்க தயாா் செய்யப்பட்டிருந்த உணவின் தரம், அங்கன்வாடி மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம் பதிவேடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.