மூலக்குறிச்சி: புதிய அறிவு சார் மையம் கட்டுமான பணி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலக்குறிச்சி ஊராட்சியில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் TAHDCO மூலம் ரூ. 1.31 கோடி மதிப்பீட்டில் புதிய கிராம அறிவுசார் மையம் மற்றும் ரூ. 60.00 இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் எம்பி ராஜேஷ்குமார், அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். மேலும் ஒன்றிய திமுக செயலாளர் இராமசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி