இராசிபுரம் அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓ. சவுதாபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் தங்கராஜ்(40). கூலி தொழிலாளியான இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் (ஜூன் 11) இரவு நேரத்தில் வெளியில் சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள் அக்கம், பக்கம் தேடினர். அப்போது, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது. 

உறவினர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது தங்கராஜ் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று, தங்கராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து கிணற்றில் தவறி விழுந்து தங்கராஜ் உயிரிழந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி