நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை அடுத்த வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த 25 வயது சுரேந்தர், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மல்லசமுத்திரம் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.