சிறப்பு விருந்தினராக கோவை மேக் இந்தியா லிமிடெட் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் கலந்துகொண்டு புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டார். இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் என். வி. நடராஜன் பேசுகையில்,
'மேக் இந்தியா நிறுவனம் கழிவு மேலாண்மையில் புதுமைகளை உருவாக்கும் நிறுவனமாகும். விவசாயம் மேன்மையடையவும், தொழில்நுட்பம் வாயிலாக சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இந்நிறுவனம் மூலமாக பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள். எனவே இந்த ஒப்பந்தமானது இயற்கையை பாதுகாக்கவும், மாணவர், மாணவிகளை ஆராய்ச்சியை நோக்கி வழிநடத்தவும் வாய்ப்பாக அமையும்' என்றார்.