நாமக்கல், பிள்ளாநல்லூர் அடுத்த கொமாரபாளையத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் சிறப்பு யாக பூஜைகள் நிறைவடைந்தன. தொடர்ந்து கலச பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.