நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக கே. பி. சரவணன் நியமனம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக கே. பி. சரவணன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் பாஜகவின் உள்கட்சித் தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மட்டுமின்றி நகர, ஒன்றிய, மாவட்ட புதிய நிர்வாகிகள் வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் புதிதாக 33 மாவட்டங்களுக்கான மாவட்டத் தலைவர்கள் குறித்த பட்டியல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வெளியானது. 

இதையொட்டி நாமக்கல் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே. பி. ராமலிங்கம், மாவட்டத் தலைவராக கே. பி. சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி