இரா. புதுப்பட்டி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்

நாமக்கல் மாவட்டம், இரா. புதுப்பட்டி பேரூராட்சியில் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கனிமங்கள் மற்றும் சிறு கனிமங்கள் துறை நிதியின் கீழ் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி இன்று தொடங்கியது. எம்பி ராஜேஷ்குமார் இந்த பணியை தொடங்கி வைத்தார். அவருடன் பேரூர் கழக செயலாளர் ஜெயக்குமார், பேரூராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி