பிள்ளாநல்லூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகின்ற நிலையில், நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. திடீர் கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும் கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி