நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவு சுமார் 8:30 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. இந்த திடீர் கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.