நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் உள்ள ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நவ. 16 அன்று, சுவாமிக்கு மேளம் தாளங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.