குருக்கபுரம்: 1505 மகளிர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியத்தில், குருக்கபுரம், கூனவேலம்பட்டி, பொன்குறிச்சி, பி. ஆயிபாளையம், 85 ஆர். கொமரபாளையம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 153 மகளிர் சுயஉதவி குழுக்களின் 1505 உறுப்பினர்களுக்கு இன்று அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எம்பி ராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்று அடையாள அட்டைகளை வழங்கினர். இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி