இராசிபுரம் அருகே அரசு விரைவு பேருந்து விபத்து

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், சென்னையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த அரசு விரைவு பேருந்து, ஓட்டுநர் லோகநாதன் ஓட்டிச் சென்றபோது, இராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதி அருகே விபத்துக்குள்ளானது. எதிர் திசையில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, மழையின் காரணமாக பிரேக் பிடிக்காமல் பேருந்து அருகில் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி