இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏல விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இதில் ஆர். சி. எச். ரகம்-1, 327 மூட்டைகள், டிசிஎச் ரகம் -16 மூட்டைகள், கொட்டு ரகம் 32 மூட்டைகள் என மொத்தம் 1, 375 மூட்டைகளை ஏலத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில் ஆர். சி. எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 7, 399 முதல் அதிகபட்சமாக ரூ. 7, 911 வரை விற்பனையானது. டி. சி. எச். ரகம் ரூ. 9, 135 முதல் ரூ. 9, 215 வரையும், கொட்டு ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 3, 869 முதல் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 4, 899 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.