ராசிபுரத்தில் ரூ. 26 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் ஆர். கவுண்டம்பாளையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

இதில் ராசிபுரம், சிங்களாந்தபுரம், காக்காவேரி, குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 1173 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ஏலம் எடுக்க சேலம், திருச்செங்கோடு, ஆத்தூர், உள்ளிட்ட பகுதிaகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஆர்சிஎச் 1141 மூட்டையும், டி. சி. ஹச்-5மூட்டை, கொட்டுபருத்தி-27 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் ஆர்சிஎச் குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 7819க்கும், குறைந்தபட்சமாக ரூ. 7099க்கும், டிசிஹெச் அதிகபட்சமாக ரூ. 9535க்கும், கொட்டு பருத்தி அதிகபட்சமாக ரூ. 5289க்கும், குறைந்தபட்சமாக ரூ. 3800க்கும் விற்பனையானது. மொத்தம் 1173 பருத்தி மூட்டை ரூ. 26 லட்சத்திற்கு ஏலம் போனது.

தொடர்புடைய செய்தி