குருசாமிபாளையத்தில் தேர் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணியர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 

இதனை தொடர்ந்து இன்று சுமார் மாலை 4 மணி அளவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று குருசாமிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே நிறுத்தப்பட்டது. நாளை தேர் கோவிலை வந்தடையும். சிறப்பு மிக்க தேர் திருவிழாவை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி