இராசிபுரத்தில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில், சித்தி விநாயகர் கோயில், பட்டணம் சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, இந்திரா காலனி, இ. பி. காலனி, புதுப்பாளையம் சாலை, நெசவாளர் காலனி, பழைய பேருந்து நிலையம், ராமசாமி தெரு, காட்டூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர் வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் எஸ். பி. கந்தசாமி, பாஜக நலத் திட்டங்கள் பிரிவு மாநில அமைப்பாளர் லோகேந்திரன், இராசிபுரம் நகர அதிமுக செயலர் எம். பாலசுப்பிரமணியம், நகர பாஜக தலைவர் பி. வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி