தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.