நாமக்கல்: கருணாநிதி பிறந்தநாள்; இனிப்புகள் வழங்கிய திமுகவினர்

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூர் திமுக சார்பாக கலைஞரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் தலைமையில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன் முன்னிலையில், கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கப்பட்டது. 

மேலும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து செங்குந்தர் மகாஜன துவக்க பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட, நலத்திட்ட உதவிகள் வழங்கி, சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி