நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், நகர அதிமுக செயலாளர் எம். பாலசுப்ரமணியம் தலைமையில் கட்சி நிர்வாகிகள், நகராட்சி ஆணையர் நிவேதாவிடம் புகார் மனு அளித்தனர். இராசிபுரம் நகராட்சியில், 108 வது பூத்துக்கு விண்ணப்பம் அளிக்க வந்த பி. எல். ஓ. ஊழியர், 150க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை திமுக பி.எல்.ஏ.விடம் மொத்தமாக வழங்கியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.