ராசிபுரம் தகுதி சான்று புதுப்பிக்காத 9 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன் உத்தரவின்பேரில், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ. செல்வகுமாா், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டாா். வெண்ணந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வில், தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 4 வாகனங்கள் வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. மேலும், ராசிபுரம் பகுதிகளில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 4 வாகனங்கள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி