இராசிபுரத்தில் 63 நாயன்மாா்கள் விழா இன்று தொடக்கம்

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் உள்ள 63 நாயன்மார்களுக்கு ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு 3 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்நாளான ஜூலை 31 இல் பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை அபிஷேகம், துறந்த முனிவர் தொழும்பரவை துணைவர் என்ற தலைப்பில் கோவை மணிவாசகர் அருட்பணி மன்றச் செயலர் சிவ. ப. குமரலிங்கம் பங்கேற்கும் சொற்பொழிவு நடைபெறுகிறது. 

இதில் து. தி. ராஜராஜசோழன் வரவேற்றுப் பேசுகிறார். 2 ஆம் நாள் நிகழ்வாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீவிநாயகர், முருகர், நந்தியெம்பெருமான், பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சன வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடைபெறுகிறது. அதன்பிறகு அறம் வளர் நாயகி உடனமர் கைலாசநாதர், 63 நாயன்மார்கள், மூலவர், உற்சவர், திருமேனிகளுக்கு திருமஞ்சனம், அபிஷேக அலங்காரம், திருமுறைப்பாராயணம், பேரொளிவழிபாடு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி