ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டியைச் சேர்ந்த அரிசி வியாபாரி லோகநாதன் (52) ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனார். அவரது மனைவி புகாரளித்த நிலையில், நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் தலையில் காயங்களுடன் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் அது காணாமல் போன லோகநாதனின் உடல் என உறுதி செய்யப்பட்டது. இதில் மணி, வைரமுத்து ஆகியோர் தொடர்புடையதை கண்டறிந்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.