இராசிபுரத்தில் 2 அடி நீளம் கட்டுவிரியன் பாம்பு மீட்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன், வேலை நிமித்தமாக கடைவீதிக்கு வந்தபோது, அவரது இருசக்கர வாகனத்தில் 2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பன், பொதுமக்களின் உதவியுடன் சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி