குருசாமிபாளையம் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களைப் பாராட்டி வாழ்த்தினர். இதில் திவ்யா 496, ஆத்மசாதகி 489, நிவேதா 485 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இந்த சாதனை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி