நாமக்கல் மாவட்டம் வையப்பமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொன்குறிச்சி, முஞ்சனூர், சித்தமூப்பன்பாளையம், கல்லுப்பாளையம் போன்ற இடங்களில் விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வெங்காயம் வளர்ச்சி அடையத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.