திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் கவிதா(50). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி, கோவையில் வசித்து வரும் தனது மகன் வீட்டிற்குச் சென்றார். நேற்று (ஜனவரி 18) காலை, கவிதா தனது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின் கதவு உடைத்து திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 3.5 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து கவிதா திருச்செங்கோடு புறநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.