நாமக்கல்: வெள்ளம் பாதித்த பகுதியை ஆட்சியர் நேரில் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் கந்தம்பாளையம் பள்ளி பாளையம் சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை அதிக அளவு பெய்த காரணத்தால் வீடுகள் மற்றும் வயல்வெளிகளில் நீர் நிரம்பியது. 

இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் பொருள் உதவி வழங்கினார். ஒரு சில இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி