நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகம் முன்பு, டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கிய குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. டாஸ்மாக் கடை தாக்கும் அவலத்தை நடத்தும் தமிழக அரசை கண்டித்தும் தொழிற்சங்க ஊழியர்கள் கண்டனம் தெரிவித்தனர்.