சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு இல்லந்தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி ஜெயக்குமார் கலந்து கொண்டார். இதில் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு மாணவரணி உறுப்பினர்களாக கையொப்பமிட்டு சேர்ந்து கொண்டனர். இல்லந்தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாமில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகப் பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை