கதவுக்கு கீழே கிடந்த செருப்புகள் , தொங்கிக் கொண்டிருந்த திரரைச்சீலைகள், அங்கிருந்த சேர்கள் உள்ளிட்ட பொருட்களை தீப்பிடித்து எரிந்துள்ளது. தண்ணீரை எடுத்து ஊற்றி அனைத்தனர்.
இது குறித்து சேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பரமத்திவேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா, காவல் ஆய்வார் இந்திராணி மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடைய அறிவியல் நிபுணர்கள் கைரேகை நிபுணர்கள் வந்திருந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.