பரமத்தி வேலூா் அருகே நெட்டையாம்பாளையம், பொத்திக்காடு பகுதியைச் சேர்ந்த ராசம்மாள் (73) வியாழக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வந்தபோது, மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கட்டிப்போட்டு, முகத்தை மூடி, வாயில் துணியை அடைத்து, கை கால்களை சேலையால் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர், ஏழரை பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர். வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.