நாமக்கல்: ஆன்லைன் ரம்மி பணம் இழப்பு - வாலிபர் தற்கொலை

பரமத்தி அருகே அமைந்துள்ள கீரம்பூர் பகுதியை சேர்ந்த பிரதீப் கட்டிட மேஸ்திரி இவர் மனைவி ஹேமலதா இருவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரதீப் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கத்தில் இருந்தார். 

இதனால் மனைவி ஹேமலதாவிடம் இரண்டு பவுன் தங்க சங்கிலியை வைத்து விளையாடினார். தொடர்ந்து விளையாடும்போது ஆன்லைனில் பல ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. கடன் தொல்லையை தாங்காமல் பிரதீப் நேற்று காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி